'பாணில்' புற்று நோயை உண்­டாக்கும் நச்சு வேதிப்­பொருள் : விசா­ரணை நடத்த மத்­திய அரசு உத்­த­ரவு.!

Published By: Robert

25 May, 2016 | 09:19 AM
image

தலை­நகர் டில்­லியில் விற்­கப்­படும், 'பாண்' வகை­களில் புற்­று­நோயை உண்­டாக்கக் கூடிய வேதிப்­பொ­ருட்கள் கலந்­தி­ருப்­ப­தாக சமீ­பத்­திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளி­யாகி உள்­ளது. இது குறித்து விசா­ரணை நடத்த மத்­திய சுகா­தா­ரத்­துறை அமைச்­சகம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

டில்­லியில் பர­வ­லாக விற்­ப­னை­யாகும் 32வகை பாண்­களில் பொற்­றா­சியம் , புரோமேட் , பொட்­டா­சியம் அயோடேட் ஆகிய வேதிப்­பொ­ருட்கள் கலந்­துள்­ளன. இது சி.எஸ்.இ. எனப்­படும் அறி­வியல் மற்றும் சுற்­றுச்­சூழல் மையம் நடத்­திய சமீ­பத்­திய ஆய்­வு­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

சி.எஸ்.இ.துணை பொது­ இ­யக்­குநர் சந்­தி­ர­பூஷண் இது தொடர்பில் தெரி­வித்­த­தா­வது, பாண் உள்­ளிட்ட சில உணவுப்பொருட்­களில் கலந்­துள்ள வேதிப்­பொ­ருட்­களில் ஒன்று, புற்­று­நோயை ஏற்­ப­டுத்தக் கூடிய '2பி கார்­சி­னோஜென்' வகையைச் சார்ந்­தது. மற்­றொரு வேதிப்­பொருள், தைராய்டு பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தும். இவை வெளி­நா­டு­களில் தடை செய்­யப்­பட்ட போதும் இந்­தி­யாவில் தடை விதிக்­கப்­ப­ட­வில்லை. டில்­லியில் பக்­கற்­று­களில் அடைக்­கப்­பட்டு சாதா­ர­ண­மாக விற்­கப்­படும் பிர­பல வர்­த்தக குறி­யீடு உள்ள பாண், பன், பீட்சா மற்றும் பாவ் பாஜி போன்­ற­வற்றின் 38 வகைகள், சி.எஸ்.இ. ஆய்­வ­கத்தில் பரி­சோ­திக்­கப்­பட்­டன. இவற்றில், 84 சத­வீத உணவுப் பொருட்­களில் பொற்­றா­சியம் புரோமேட் அல்­லது பொற்­றா­சியம் அயோடேட் கலந்­தி­ருப்­பது தெரிய வந்­துள்­ளது.

இது ­த­விர வேறு சில ஆய்­வ­கத்தில் நடந்த சோத­னை­க­ளிலும் இது போன்ற முடிவு தான் கிடைத்­தன. சோத­னைக்­குள்­ளான பாண் போன்­ற­வற்றில் புற்­றுநோய் உண்­டாக்கும் உண­வுப்­பொருள் பக்­கற்­று­களின் முத்திரை உள்­ளிட்ட விட­யங்­க­ளையும் சோதித்தோம். பின், சம்­பந்­தப்­பட்ட துறை­யினர் மற்றும் விஞ்­ஞா­னி­க­ளுடன் இது­கு­றித்து பேசினோம்.

இச்­சோ­த­னைகள் மூலம் பான், பன் போன்ற வகை உணவுப் பொருட்­களில் வேதிப்­பொருள் கலப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது என்றார்.

வேதிப்­பொருள் கலந்­தி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­வது குறித்து உட­ன­டி­யாக விசா­ரணை நடத்தி அறிக்கை சமர்ப்­பிக்­கும்­படி அதி­கா­ரி­க­ளுக்கு மத்­திய அரசு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

பாண் போன்­ற­வற்றை மிரு­து­வாக்­கு­வ­தற்­காக பொற்­றா­சியம் அயோடேட் மற்றும் பொற்றாசியம் புரோமேட் பயன்படுத்த, ஐரோப்பிய நாடுகள் 1990இல் தடை விதித்தன. பின், பிரிட்டன், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, சீனா, பிரேசில், இலங்கை, நைஜீரியா, பெரு, கொலம்பியா போன்ற நாடுகளில் தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனோநிலை பாதிக்கப்பட்டவரே சிட்னியில் நேற்று கத்திக்குத்து...

2024-04-14 13:19:17
news-image

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?...

2024-04-14 11:47:04
news-image

இஸ்ரேலிற்கு மரணம் - ஆயிரக்கணக்கான ஈரான்...

2024-04-14 10:03:46
news-image

ஈரானின் ஏவுகணைகளை வீழ்த்துவதில் அமெரிக்கா இஸ்ரேலிற்கு...

2024-04-14 09:45:24
news-image

முக்கிய அதிகாரிகளுடன் பைடன் அவசரசந்திப்பு

2024-04-14 07:18:26
news-image

ஈரான் தாக்குதல் - இஸ்ரேலின் தென்பகுதி...

2024-04-14 07:24:52
news-image

நூற்றுக்கும் மேற்பட்ட ஆளில்லா விமானதாக்குதல்கள் ஏவுகணை...

2024-04-14 06:48:31
news-image

தாயையும் குழந்தையையும் வாள்போன்ற ஆயுதத்தினால் தாக்கிய...

2024-04-13 15:35:05
news-image

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வணிகவளாகமொன்றில் கத்திக்குத்து தாக்குதல்...

2024-04-13 13:58:26
news-image

மனிதாபிமான பணியாளர்களிற்கு தொடர்ந்தும் ஆபத்தானதாக காணப்படும்...

2024-04-13 11:38:23
news-image

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை மேற்கொள்ளக்கூடிய...

2024-04-12 21:26:07
news-image

100க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் குரூஸ்...

2024-04-12 20:28:07