(செ.தேன்மொழி)

குடிவரவு குடியகழ்வு சட்டத்திற்கு புறம்பாக வீசா அனுமதிப் பத்திரமின்றி கொட்டாஞ்சேனை- சுமனதிஸ்ஸ மாவத்தையில் தங்கியிருந்த இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொட்டாஞ்சேனை பொலிஸாருக்கு நேற்று கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இந்தியப்பிரஜையான 42 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.