அவுஸ்திரேலியாவில்  நீருக்கடியில் நீந்தி கொண்டிருந்த வேளை பிரித்தாணியாவை சேர்ந்த இரண்டு சுற்றுலாவாசிகள் சுறாக்களின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்கள். அதில் ஒருவர் சுறாவினால்  பலத்த தாக்குதலுக்குட்பட்டு ஒரு காலை இழந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள ஏர்லி பீச் அருகே 22 மற்றும் 28 வயதுடைய இருவர் ஸ்நோர்கெலிங் சுற்றுலா படகில் இருந்துள்ளார்கள்.

அவ்வேளை நீருக்கடியில் நீந்திய போது 22 வயதுடைய  நபர் முதலில் சுறாவினால் தாக்கப்பட்டார், அவரது கீழ் காலில் சிதைவுகள் ஏற்பட்டது. 

பின்னர் சுறா மற்ற 28 வயதுடைய நபரைத் தாக்கி, காலை கடித்ததாக கூறப்படுகிறது.

கப்பலில் இருந்த துணை மருத்துவர்களான பயணிகளால் தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.

பின்பு, இருவரையும் ஹெலிகப்டர் மூலம் வைத்தியாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கபட்டுள்ளது.

குறித்த சம்பவத்தன்று ஸ்நோர்கெலிங் சுற்றுலா படகில் 20 சுற்றுலா பயணிகள் இருந்துள்ளார்கள்.