(இராஜதுரை ஹஷான்)
தேசிய பாதுகாப்பு குறித்து எவ்வித அனுபவங்களும், திறமைகளும் தற்போதைய அரசாங்கத்தில் எவருக்கும் கிடையாது.தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவதற்காகவே தேர்தல் கொள்கை பிரகடனத்தில் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
வழங்கப்படும் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
பிபிலை நகரில் இன்று இடம் பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் பிரதான ஜுவனோபாய உற்பத்தியான விவசாயத்திற்கு உரிய நிலை வழங்கப்படும். எக்காரணிகளுக்காகவும் விவசாய உற்பத்திகளை இரண்டாம் பட்சமாக்க மாட்டேன். வீழ்ச்சியடைந்துள்ள தேசிய உற்பத்திகள் அனைத்தும் ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்திற்குள் மேம்படுத்தப்படும்.
வீழ்ச்சியடைந்துள்ள விவசாயத்தினை மீள் கட்டியெழுப்ப விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
இலவச உரமாணியம் வழங்கப்படுவதுடன், விவசாயிகளுக்காக இலகு கடன் வசதிகளும் வழங்கப்படும் . விவசாயத்தினை அடையாளமாகக் கொண்டு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகள் விவசாய துறையில் பயன்படுத்திய தொழினுட்ப முறைமைகள் அனைத்தும் எமது நாட்டு விவசாய துறையிலும் இலவசமான முறையில் செயற்படுத்துவோம் என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM