தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று காலை 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மத்திய மிண்டானாவோவை மையமாக கொண்டு இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கம் துலுனனுக்கு வடகிழக்கில் 26 கிலோ மீற்றர் தொலைவில் அந்நாட்டு நேரம் படி காலை 9:04 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு நிறுவனம் (பிவோல்க்ஸ்) தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் கட்டிடங்களுக்கு வெளியே இருக்குமாறு பிவோல்க்ஸ் அறிவுறுத்தி உள்ளது.
குறித்த நிலநடுக்கத்தினால் தெற்கு கோட்டாபடோ மாகாணத்தின் தலைநகரான கொரோனடலில் 66 வயதான நபர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளார்கள்.
மேலும் அங்கு வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் நிலம் அதிர்ந்ததால் 70 பேர் காயமடைந்தனர்.
பிலிப்பைன்ஸில் பூகம்பங்கள் பொதுவானவை, இது புவியியல் ரீதியாக செயல்படும் பசிபிக் நெருப்பு வளையம் பகுதியில் உள்ளது.
அக்டோபர் 16 ல், 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் மத்திய மிண்டானாவோவைத் தாக்கியது, ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன் அதிகமானவர்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM