கடந்த 10 மாதங்களில் நாட்டில் மொத்தம் 60,110 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அத்துடன் இவ்வாண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதிவரை நாடளாவிய 74 பேர் டேங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோய் அதிகரித்துள்ளதுடன், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு முழுவதும் மொத்தம் 58 டெங்கு  இறப்புகளும் 51,659 நோயாளர்களும் இனங்காணப்பட்டிருந்தனர். 

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய 5 மாவட்டங்கள் டெங்கு நோயாளர்களின்  எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பொதுமக்கள் அனைத்து வகையான நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களிலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், அவற்றை தொடர்ந்து அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

"நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களை சுத்தம் செய்ய வாரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்  என்றும்  தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.