கடும் மழை காரணமாக அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சகல பாடசாலைகளுக்கும் பூட்டு

Published By: Digital Desk 3

29 Oct, 2019 | 05:13 PM
image

(இரா.செல்வராஜா)

நாட்டில் தற்போது நிலவிவரும் மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

தென் மாகாணத்தில் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவிவருவதால் அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளையும் நாளை  புதன்கிழமை மூடுமாறு மாகாண ஆளுனர் உத்தரவிட்டுள்ளார்.

இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலயத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சியாக 220 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. மாத்தறை மாவட்டத்தில் 205.5 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.

நாளை புதன்கிழமை கிழக்கு ,மத்திய ,சப்பிரகமுவ ,ஊவா ,தென் ,மேல் ஆகிய மாகாணங்களில் சில பகுதிகளில் 150 முதல் 200 மில்லி மீற்றர் வரை மழைபெய்யக் கூடிய வாய்ப்பு இருப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. 

நாட்டில் தற்போது நிலவிவரும் மழையுடனான காலநிலை தொடர்பாக வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்ததாவது ,

இலங்கைக்கு தெற்காக வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியில் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கிழக்கு ,மத்திய ,சப்பிரகமுவ ,ஊவா ,தென் ,மேல் ஆகிய மாகாணங்களில் கடும் மழை பெய்வதற்கான சாத்தியம் அமைந்துள்ளது.அத்துடன் நாட்டிற்கு மேலாக திடீரென 50 முதல் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும்.

மன்னார் ,புத்தளம் ,கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடல் பிராந்தியங்களில் காற்று அடிக்கடி அதிகரித்த வேகத்தில் வீசுவதால் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். இந்த கடல் பிராந்தியங்களை பயன்படுத்தும் கடல் சார்ந்த ஊழியர்களும் மீன்வர்களும் மிகவும் எச்சரிக்கையாக செயற்பட வேண்டும்.

மழை பெய்யும் வேளைகளில் ஏற்படும் இடி, மின்னல் தாக்கங்களின் போது பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04