கொழும்பில் நிலவிய சீரற்ற காலநிலையால் களனி, வெல்லம்பிட்டிய, கொலனாவ, சேதுவத்த உள்ளிட்ட கொழும்பின் பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கின.

வீடுகள், வீதிகள், வாகனங்கள் என அனைத்தும் நீரில் மூழ்கின. தற்போது காலநிலை வழமைக்கு திரும்பியுள்ளதால் வீடுகளை மூழ்கியிருந்த வெள்ளம் வற்றியுள்ளது.

தனது சிறிய வருமானத்தில் சிறிது சிறிதாக சேர்த்து கட்டிய வீடுகள் சேர்த்த சொத்துக்கள் ஆவணங்கள் வாகனங்கள் என அனைத்தும் அலங்கோலமான நிலையில் காணப்படுகின்றன.

இவற்றில் ஒன்றை கூட மீள பாவிக்க முடியாத நிலைக்கு இந்த அப்பாவி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

Pics By : J.Sujeewakumar