அமெரிக்க இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலினால் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூபக்கர் பாக்தாதியை அமெரிக்க படையினர் சுற்றிவளைத்தபோது அவர் தற்கொலைசெய்து உயிரிழந்தார் இந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது டுவிட்டரில் குறிப்பிட்டள்ளதாவது,

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றிகரமான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். 

அபூபக்கர் பாக்தாதி உயிரிழந்தமையானது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதுடன், உலகின் பாதுகாப்பிற்கும் பெரும் பங்காக அமைந்துள்ளது.

உலகளாவிய ரீதியில் பயங்கரவாதத்த‍ை ஒழிப்பதற்கு அமெரிக்க இராணுவமும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.