நாட்டில் சீரற்ற காலநிலையால் ஏற்பட அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க 14, 500 கோடி ரூபாய்களை அரசாங்கம் நிதியொதுக்கீடு செய்துள்ளது. 

சர்வதேச நாடுகளின் நிதியுதவி மற்றும் நிவாரண உதவிகளையும் சேர்த்து இழப்பீடுகளை சரிசெய்ய போதுமான நிதி உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் சர்வதேச நாடுகளின் பண உதவிகளை அந்நாட்டு நாணயங்களில் செலுத்தவும் மத்தியவங்கி விசேட ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் தெரிவித்தது. 

நாட்டில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களை சரிசெய்ய போதுமான நிதியொதுக்கீடு இல்லையென எதிரணியினர் குற்றம் சுமத்தியுள்ள நிலையில் அரசாங்கம் எவ்வாறான வகையில் இவற்றை கையாள்கின்றது என வினவியபோதே அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

(ஆர்.யசி)