ஜனாதிபதி வேட்பாளர்கள் சிலர் தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளனர். இதில் ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்தவிதமான நன்மையும் இல்லை. பொது ஜன பெரமுன வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு தொடர் மாடி வீட்டுத்திட்டத்தை அறிமுகப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்கள். அதனை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் விசேட பிராந்தியங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர்கள் சிலர் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வு நுவரெலியாவில் நடைபெற்றது. அதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
எமது மக்கள் சுமார் 150 வருடங்களுக்கு மேலாக தொடர்மாடி வீடுகளிலும் தொடர் குடியிருப்புக்களிலும் வாழ்ந்து பல்வேறு அனுபவங்களையும் துன்பங்களையும் அனுபவித்துள்ளார்கள். இதனால் சந்திரசேகரன் 1994ஆம் ஆண்டு எமது மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்று தனிவீட்டுத்திட்டத்தை கொண்டு வந்தார். அதற்கு பின் அந்த திட்டம் நிறுத்தப்பட்டு தொடர்மாடி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து நாங்கள் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நல்லாட்சியில் இப்போது அமைச்சர் திகாம்பரம் ஊடாக ஏழு பேர்ச்சஸ் காணியில் தனி வீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். அந்த திட்டம் மேலும் அபிவிருத்தியடைய வேண்டுமே தவிர அது மீண்டும் பின்னோக்கி போகக்கூடாது. தொடர் மாடி குடியிருப்பில் இருப்பதும் ஒன்றுதான் லயத்தில் இருப்பதும் ஒன்றுதான். கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட மாடி வீட்டுத் திட்டங்களில் எவ்வித வசதிகளும் இன்றி பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர். ஆகவே மீண்டும் ஒரு தொடர்மாடி வீட்டுதிட்டத்தை கொண்டு வந்தால் மீண்டும். மலையக மக்களின் கல்வி, சுகாதாரம், சுதந்திரம், அவர்களின் தேவைகள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் தோற்றம் பெறும். எனவே அதனை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மலையக மக்களுக்கு ஆயிரம் ரூபா தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையக மக்களை பொறுத்த வரையில் சம்பள பிரச்சினை மாத்திரம் பிரச்சினையல்ல. எமக்கு பல பிரச்சினைகள் உள்ளன. அத்தோடு ஆயிரம் ரூபா சம்பள பிரச்சினையை பேசி, பேசி எமது மக்கள் அலுத்துப்போய்யுள்ளனர்.
அத்தோடு இன்று புரையோடிக் கொண்டிருக்கின்ற இனப்பிரச்சினைக்கும் எவ்வித தீர்வும் இல்லை. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன் வைத்துள்ள யோசனைகளை பேசுவதற்கு கூட அவர்கள் தயாராக இல்லை என்பது தான் உண்மை. இந்நிலையில் அந்த மக்களின் பிரச்சினைகள் அபிவிருத்திகள் பேசப்படாத நிலையில் ஒட்டு மொத்த தமிழ் முஸ்லிம் மக்களும் இம் முறை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிப்பார்கள் என்பது எவராலும் மறுக்கப்பட முடியாத உண்மை எனவும் தெரிவித்தார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM