உலகின் மிகப்பெரும் காகிதப் பணம் அச்சிடும் நிறுவனமான, தெ லா ஷரூ (De La Rue) என்ற பிரிட்டிஷ் நிறுவனம், காகிதத்தில் பணம் அச்சிடுவதைக் குறைக்கப்போவதாக அறிவித்துள்ளது.
காகிதப் பணப் பாவணை குறைந்து வருவதும், தொழிலில் அதிகரித்துவரும் போட்டியுமே இதற்குக் காரணமாகும்.
தான் அச்சிடும் காகிதப் பணம், 800 கோடியிலிருந்து 600 கோடியாகக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மோல்டாவில் உள்ள அச்சுக் கூடம் ஒன்றையும் குறித்த நிறுவனம் மூட உள்ளது.

தெ லா ஷரூ (De La Rue) பிளாஸ்டிக் வங்கி காகிதப்பணத்தையும் தயாரிக்கிறது. இந்த காகிதப்பணம் பிரிட்டனில் அடுத்த ஆண்டு புலக்கத்துக்கு வரும்.
சுமார் 150 ஆண்டுகளுக்கும் முன்பே இந்த நிறுவனம் காகிதப் பணம் அச்சிட ஆரம்பித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.