(எம்.மனோசித்ரா)
இலங்கையில் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலானது அரசியல் மறுசீரமைப்புக்கும் தேசிய நல்லிணக்கத்துக்கும் வளர்ச்சி பாதையில் முன்னேற்றகரமாக இட்டுச் செல்வதாக அமைய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான உயர் பிரதிநிதியும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதி தலைவருமான பிரட்ரிக்கா மொக்ஹெரனி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு ஐரோப்பிய ஒன்றிய த்தின் பிரதம கண்காணிப்பாளராக ஐரோ ப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினரான மரிசா மத்தியஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியமானது இலங்கையுடனான தொடர்பு குறித்து முக்கியத்துவமளிப்பதுடன் இலங்கையில் ஜனநாயக நடைமுறைகள் அமுல்படுத்துவதற்கு ஆத ரவளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் மரிசா மத்தீஸின் தலைமையின் கீழ் வெளிப்படை தன்மையுடன் செயற்படுவார்கள்.
ஐரோப்பிய ஒன்றியமானது இலங்கை தேர்தல் நடைமுறையில் நீண்டகால தொடர்பை பேணி வருகிறது. அத்துடன் இறுதியாக நடைபெற்ற 2015 தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியமானது தனது தேர்தல் கண்காணிப்பாளர்களை பணிக்கு அமர்த்தியிருந்தது.
இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலையொட்டி தேர்தல் ஆணைக்குழுவின் அழைப்பை ஏற்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இங்கு வருகை தந்துள்ளனர்.
நவம்பர் 16 தேர்தலின் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர் கள் கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தி பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பார்கள். இலங்கையில் ஐரோப்பிய ஒன்றிய தேர் தல் கண்காணிப்பாளர்கள் பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கையை சமர்ப்பி ப்பார்களே அன்றி இது குறித்து நடவ டிக்கை எடுப்பது ஐரோப்பிய ஒன்றியத் தின் பொறுப்பாகாது என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM