யாழ்ப்பாணம் – அச்சுவேலி சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்று உரிமையாளரின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் தீயில் எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது.

இந்தச் சம்பவம் சிறுப்பிட்டியில் நேற்றிரவு இடம்பெற்றது.

இனந்தெரியாதோரால் பேருந்து தீயிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அச்சுவேலிப் பொலிஸார் தற்போது  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.