நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் மக்கள் வசிக்கும் வீடுகளில் தண்ணீர் தேங்கியிருப்பதனால் தீவிரமாக டெங்கு நோய் பரவும் பாரிய அபாயம் நிலவுவதாக தெரிவிக்கும் சுகாதார கல்வி பணியகம் மறுபுறம் உடல் ரீதியான தோல் நோய்கள் உட்பட ஏனைய நோய்கள் பரவுவதற்கான அபாயம் தொடர்ந்தும் காணப்படுவதால் மக்கள் இது தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் அறிவித்துள்ளது.

மேலும் முறையான சுகாதார பழக்கவழக்கங்களை மக்கள் பின்வற்றுவதன் மூலம் நோய் ஏற்படுவதனை முற்றாக தடுக்க முடியும் எனவும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு  தொற்று நோய்கள் ஏற்படாமலிருக்க அனைத்து விதமான மருத்துவ ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அமால் ஹர்ச டி சில்வா தெரிவித்தார்.

சுகாதார சேவை பணியகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

(பா.ருத்ரகுமார்)