(ஆர்.விதுஷா)

கொழும்பு துறைமுகத்தை  அண்டிய  பகுதியிலிருந்து இன்று மாலை   இனம்  தெரியாத நபரொருவரின்   சடலம்    மீட்கப்பட்டுள்ளதாக  கடற்படை  ஊடகப்பிரிவு  தெரிவித்துள்ளது.

கொழும்பு  கரையோரத்திற்கு   பொறுப்பான  அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு  அமைய   கடற்படை  சுழியோடிகளின்  உதவியுடன்   சடலத்தை  மீட்கும்  பணிகள்  இடம் பெற்றிருந்தன.  

இந்த  மீட்பு  பணிகளில்  கரையோர  பொலிஸ்  அதிகாரிகளும்    ஈடுபட்டுபட்டதுடன்,    சம்பவம்  தொடர்பிலான  மேலதிக விசாரணைகளை கரையோர  பொலிசார்  மேற்கொண்டு  வருகின்றனர்.