(இராஜதுரை ஹஷான்)

தமிழ் - முஸ்லிம் மக்களின் வாக்குகள் நிச்சயம் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு கிடைக்கப் பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அத்துடன் பாரம்பரியமான அரசியல் முறைமையில் இருந்து விடுப்பட்டால் மாத்திரமே நாடு முன்னேற்றமடையும்.போலியாக  குற்றச்சாட்டுக்களுக்கு இம்முறையும் தமிழ் மக்கள் கவனம் செலுத்த கூடாது.

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால்  வெளியிடப்பட்ட கொள்கை பிரகடனம்  தொடர்பில் எத்தரப்பினரும் விமர்சனங்களை முன்வைக்க முடியாது. அரசியல்வாதிகளின் தலையீடுகள் ஏதும் இல்லாமலே கொள்கை  பிரகடனம் உருவாக்கப்பட்டது. துறைசார் நிபுணர்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை  கொடுக்கப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கில் மாத்திரம் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் இல்லை. நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும்  அடிபட்படை பிரச்சினைகள் பல காணப்படுகின்றது.  அனைத்து பிரதேசங்களில் பிரச்சினைகளும் பொதுவாகவே தீர்க்கப்பட வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஏனைய மாகாணங்களை போன்று அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.