ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தலைவர் அபூபக்கர் அல்பக்காதி இறந்ததாக கூறப்படும் இடத்திலிருந்து மேலும் ஏழு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிரியவின்  இட்லிபில்  மாகாணத்தில் உள்ள பாரிஷா கிராமத்திற்கு அருகே எட்டு ஹெலிகாப்டர்களும் இரண்டு ட்ரோன்களும் அல்பக்காதி பதுங்கியிருந்த இலக்கை குறி வைத்து சுமார் ஒன்றரை மணிநேரம் தாக்குதல் நடத்தியது.

மேற்படி  கிராமம் சிரிய எல்லையிலிருந்து துருக்கியுடனான ஆறு மைல் தொலைவில் அமைந்துள்ளது.

அமெரிக்காவின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து, கிராமத்தில் ஒரு வீடு முற்றிலுமாக அழிக்கப்பட்டு பல கூடாரங்கள் எரிக்கப்பட்டன.

இதன்போதே ஒரு குழந்தை மற்றும் மூன்று பெண்கள் உட்பட ஏழு சடலங்களை நாங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.