(செ.தேன்மொழி)

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இதுவரையில் 1835 முறைபாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேசிய தேர்தல் முறைப்பாட்டு  முகாமைத்துவ நிலையத்திற்கும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு  முகாமைத்துவ மத்திய நிலையங்களுக்கும் கிடைக்கப்படும் முறைப்பாடுகளில் அதிகளவிலான முறைப்பாடுகள் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பிலேயே பதிவாகியுள்ளன.

இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியிலிருந்து சனிக்கிழமை பிற்பகல் 4 மணிவரையான 24  மணித்தியாலத்திற்குள் தேர்தல் தொடர்பில் 69 முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. 

மாவட்ட தேர்தல் முறைபாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 56 முறைபாடுகளும், தேசிய தேர்தல் முறைபாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 13 முறைபாடுகளும் அளிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய  66 முறைபாடுகள் தேர்தல் சட்டதிட்டங்களை மீறியதாகவும், இரு முறைப்பாடுகள்தேர்தல் தொடர்பான ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பிலும், வன்முறைகள் தொடர்பில் ஒரு முறைப்பாடும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த 8 ஆம் திகதி முதல் நேற்று பிற்பகல் 4 மணிவரையான 19 நாட்களுக்குள் 1835 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. 

மாவட்ட தேர்தல் முறைபாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1249 முறைபாடுகளும், தேசிய தேர்தல் முறைபாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 586 முறைபாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.