டேவிட் வோர்னர் இன்றைய தினம் சதம் விளாசியதுடன், போட்டியின் ஆட்டநாயகனாவும் தேர்வுசெய்யப்பட்டு, தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

அவுஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வோர்னர் இன்யை தினம் தனது 33 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

அதேவேளை அடிலெய்டில் இன்று ஆரம்பான இலங்கைக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் மொத்தமாக 56 பந்துகளில் 10 நான்கு ஓட்டம், 4 ஆறு ஓட்டம் அடங்கலாக சதம் விளாசி ஆட்டமிழக்காதிருந்தார். சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட்  அரங்கில் டேவிட் வோர்னர் பெற்றுக் கொண்ட முதல் சதம் இதுவாகும்.

அத்துடன் இப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டும் உள்ளார்.