இலங்கைக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 134 ஓட்டங்களினால் அபார வெற்றிபெற்றுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் அடிலெய்டில் ஆரம்பாது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி பந்து வீசத் தீர்மானித்து. 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி டேவிட் வோர்னர் மற்றும் ஆரோன் பிஞ்சின் அதிரடியான ஆட்டத்தினால் ஓட்டங்களை 233 ஓட்டங்களை குவித்தது.

இதன் பின்னர் 234 என்ற மிகப்பெரிய வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணித் துடுப்பாட்ட வீரர்கள் சொப்ப ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தனர்.

இறுதியாக இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்களை இழந்து, 99 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 134 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

இலங்கை  அணி சார்பில் தனுஷ்க குணதிலக்க 11 ஓட்டத்துடனும், குசல் மெண்டீஸ் டக்கவுட்டுடனும், பானுக்க ராஜபக்ஷ 2 ஓட்டத்துடனும், குசல் பெரேரா 16 ஓட்டத்துடனும், ஓசத பெர்னாண்டோ 13 ஓட்டத்துடனும், தசூன் சானக்க 17 ஓட்டத்துடனும், வனிந்து ஹசரங்க 5 ஓட்டத்துடனும், லக்ஷான் சந்தகன் 6 ஓட்டத்துடனும், கசூன் ராஜித டக்கவுட்டுடனும் ஆட்டமிழக்க நுவான் பிரதீப் 8 ஓட்டத்துடனும், மலிங்க 13 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டாக் 2 விக்கெட்டுக்களையும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுக்களையும், அடம் ஷாம்பா 3 விக்கெட்டுக்களையும், அஷ்டோன் அகர் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

போட்டியின் ஆட்டநாயகனாக 56 பந்துகளில் 10 நான்கு ஓட்டம், 4 ஆறு ஓட்டம் அடங்கலாக சதம் விளாசிய டேவிட் வோர்னர் தெரிவுசெய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.