பாறைகளால் குழி தோண்டும் வேகம் குறைந்தது!

Published By: Vishnu

27 Oct, 2019 | 12:11 PM
image

சுஜித்தை காப்பாற்ற 100 அடிவரை முழுமையாகத் தோண்டுவதற்கு இன்னும் இரண்டு, மூன்று மணி நேரம் எடுக்கவுள்ள நிலையில் கற்பாறைகளால் குழிதோண்டும் பணியின் வேகம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின், திருச்சிரப்பள்ளி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி வீழ்ந்த 2 வயது குழந்தையான சுர்ஜித், தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ளான்.

குழந்தையை மீட்கும் பணி, 37 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக ஓ.என்.ஜி.சி.யின் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது.

ஆழ்துளை கிணறுக்கு அருகில் 2 மீட்டர் தொலைவில் 1 மீட்டர் அகலம், 110 அடி ஆழத்தில் இந்தக்குழி தோண்டப்பட்டு வருகிறது. ரிக் இயந்திரம் மூலம் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் 100 அடி குழி தோண்ட முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் தோண்டும் இடத்தில் கற் பாறைகள் இருப்பதால் குழி தோண்டும் பணி தாமதமாகியுள்ளது.

இதுவரை 20 அடி ஆழம் மட்டுமே தோண்டப்பட்டுள்ளது. 100 அடிவரை முழுமையாகத் தோண்டுவதற்கு இன்னும் இரண்டு, மூன்று மணி நேரம் ஆகலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் இரண்டு கைகளையும் இழந்த...

2025-04-17 17:06:05
news-image

ஹவார்ட்டை இனிமேல் கற்றலிற்கான சிறந்த இடமாக...

2025-04-17 13:58:57
news-image

அமெரிக்க சீன வர்த்தக போரின் தாக்கம்...

2025-04-17 10:38:27
news-image

குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து மாணவர்களை...

2025-04-17 10:05:23
news-image

கொங்கோவில் படகு தீப்பிடித்து கவிழ்ந்து விபத்து...

2025-04-17 09:52:40
news-image

நஷனல் ஹெரால்ட் வழக்கு: ராகுல் சோனியா...

2025-04-16 15:19:00
news-image

ட்ரம்பின் நடவடிக்கையால் 2026 இல் யுனிசெப்பின்...

2025-04-16 14:33:33
news-image

பாக்கிஸ்தான் இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை...

2025-04-16 13:46:38
news-image

இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளிற்கு தடை - மாலைதீவு

2025-04-16 11:24:47
news-image

ஈராக்கில் மணல் புயல் : 4...

2025-04-15 20:54:05
news-image

ரஸ்யா தெரிவிப்பதை விட ரஸ்ய படையினர்...

2025-04-15 16:29:16
news-image

நைஜீரியாவில் கிராமத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு...

2025-04-15 15:05:41