இலங்கையில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினால் அடுத்த ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் நிறுவனம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதில் எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், எம்.சி.சி.யின் தற்போதைய தலைவருமான குமார் சங்க்கார தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து சுற்றுலாத்துறை பெருமளவு வீழ்ச்சியடைந்ததுடன், ஏனைய சில நாடுகளும் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என தம் நாட்டுப் பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.

எனினும் இதனைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டமையினைத் தொடர்ந்து சுற்றுலத்துறை வழமைக்கு திரும்பியுள்ளதுடன், ஏனைய நாடுகளும் பயணத் தடையை நீக்கியது.

இந் நிலையில் எதிர்வரம் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளது.

இப் போட்டிகளனாது சர்வதேச உலகக் கிண்ண தொடருக்கான முக்கியமான போட்டியாக கருதப்படுகின்றது.

இந் நிலையிலேயே இலங்கைக்கான இங்கிலாந்தின் சுற்றுப் பயண பாதுகாப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே குமார் சங்கக்கார மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

 இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையின் பாதுகாப்பு முன்னேற்றம் அடைந்துள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க எதிர்பார்க்கிறோம்.

கிரிக்கெட்டைப் பார்க்கவும் நாட்டை ரசிக்கவும் பலர் இலங்கைக்கு வருவதால் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.