வோர்னர்,பிஞ்ச் மற்றும் மெக்ஸ்வெலின் அதிரடியினால் இலங்கைக்கு எதிரான முதலாவது சர்வதேச இருபதுக்கு - 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 233 ஓட்டங்களை குவித்துள்ளது.

இன்றைய தினம் அடிலெய்டில் ஆரம்பான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி பந்து வீசத் தீர்மானித்து. 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி டேவிட் வோர்னர் மற்றும் ஆரோன் பிஞ்சின் அதிரடியான ஆட்டத்தினால் ஓட்டங்களை வேகமாக குவித்தது.

இவர்கள் இருவரும் முதலாவது விக்கெட் இழப்புக்காக 122 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். எனினும் 10.5 ஆவது ஓவரில் பிஞ்ச் மொத்தமாக 36 பந்துகளை எதிர்கொண்டு, 3 ஆறு ஓட்டம், 8 நான்கு ஓட்டம் அடங்கலாக 64 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய மெக்ஸ்வெல்லும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 28 பந்துகளில் 7 நான்கு ஓட்டம், 3 ஆறு ஒட்டம் அடங்கலாக 62 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (229-2). தொடர்ந்து டெர்னர் களமிறங்க, அதிரடிகாட்டி வந்த டேவிட் வோர்னர் இறுதி ஓவரின் இறுதிப் பந்தில் மொத்தமாக 56 பந்துகளை 10 நான்கு ஓட்டம், 4 ஆறு ஒட்டம் அடங்கலாக சதம் விளாசினார்.

இறுதியாக அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இரு விக்கெட்டினை இழந்து ஓட்டங்களை 233 குவித்தது.