இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டி இன்றைய தினம் ஆரம்பாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியானது அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு - 20 தொடரில் விளையாடுகிறது.

இந் நிலையில் இன்றைய தினம் அடிலெய்டில் ஆரம்பமான முதலாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி பந்து வீச்சைத் தேர்வுசெய்துள்ளது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி சற்று முன்னர் வரை 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 33 ஓட்டங்களை குவித்துள்ளது. 

அவுஸ்திரேலிய அணி சார்பில் பிஞ்ச் 23 ஓட்டத்தையும், டேவிட் வோர்னர் 7 ஓட்டத்தையும் பெற்றுள்ளனர்.

Australia Squad : Aaron Finch (c), David Warner, Steven Smith, Glenn Maxwell, Ashton Turner, Alex Carey (wk), Ashton Agar, Pat Cummins, Mitchell Starc, Kane Richardson, Adam Zampa

Sri Lanka Squad : Kusal Mendis, Danushka Gunathilaka, Bhanuka Rajapaksa, Kusal Perera (wk), Oshada Fernando, Dasun Shanaka, Wanindu Hasaranga, Lakshan Sandakan, Nuwan Pradeep, Kasun Rajitha, Lasith Malinga (c)