ஜனாதிபதி தேர்தலில் பொது மக்கள் மற்றும் அமைப்புக்களின் நிலைப்பாடுகளை உள்ளடக்கிய அறிக்கையை சுயாதீனக்குழுவினர் தமிழ் மக்கள் பேரவையிடம் கையளிக்கவுள்ளனர்.

நாளை திங்கட்கிழமை நான்கு மணியளவில் சுயாதீனக் குழுவினருக்கும், தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவிற்கும் இடையில் நடைபெறவுள்ள கலந்துரையாடலின் போதே இந்த அறிக்கை கையளிக்கப்படவுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையினால் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மதத்தலைவர்களை உள்ளடக்கிய சுயாதீனக் குழுவானது ஸ்தாப்பிக்கப்பட்டிருந்தது.

அச்சுயாதீனக்குழுவானது, கிழக்கிலும் வடக்கிலும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை கடந்த இரண்டு நாட்களாக சந்தித்திருந்தது.

முதலாவதாக, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை திருகோணமலை உப்புவெளியில் உள்ள மேய்ப்பு பணி நிலையத்தில் பொது அமைப்புக்களுடனான சந்திப்பு நடைபெற்றிருந்தது.

இதன்போது ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறான அனுகுமுறைகளை செய்வது என்பது தொடர்பில் பொது அமைப்புக்களின் கருத்துக்கள் பெறப்பட்டிருந்தன.

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை மாலையில் தமிழ் மக்கள் பேரவையின் அலுவலகத்திலும் சுயாதீன குழுவினரின் பங்கேற்புடன் வடக்கு மாகாண பொது அமைப்புக்ககளின் கருத்துக்க்ள பெறப்பட்டிருந்தன.

இந்நிலையிலேயில் பொது அமைப்புக்களின் கருத்துக்களை உள்ளடக்கிய அறிக்கையை தயாரிக்கவுள்ள சுயாதீனக் குழுவினர் அதனை நாளை கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.