நாட்டிலுள்ள அனைத்து சிறுவர்களுக்கும் 13 வருட கட்டாயக்கல்வி வழங்கப்படுவதுடன் தேசிய கல்வி கொள்கையை புதிதாக அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு உயர்தரத்தில் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

குறித்த புதிய கல்வி கொள்கை மூலம் சாதாரண தரத்தில் சித்தியடையாதவர்களும் உயர்தரத்தில் கல்வி பயிலும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

பம்பலப்பிட்டி முஸ்லீம் பெண்கள் பாடசாலையில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.