தமிழகத்தில், ஆழ்துளைக்குள் சிக்கியுள்ள மகன் சுஜித்தை காப்பாற்றுவதற்காக, அவரது தாய் கண்ணீருடன் துணிப்பை தைத்துக் கொடுத்த நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தின் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் நேற்று (25ம் திகதி) மாலை 5.25 மணிக்கு, சுஜித் என்ற 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. முதலில் 26 அடியில் சிக்கியிருந்த குழந்தை, இன்று (26ம் திகதி) அதிகாலை 70 அடிக்கும் கீழே சென்றது.
தொடர்ந்து நடந்த மீட்புப் பணிகளின்போது, துளைக்குள் மண் சரிந்ததால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், “காலை 5.30 மணிக்கு மேல் குழந்தையிடமிருந்து எவ்வித சத்தமும் வரவில்லை” என்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதனிடையே, அங்கு வந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், குழந்தையை மீட்க துணிப்பை ஒன்று கேட்டனர். அத்தனை மன வேதனையிலும், பேரிடர் மீட்புக் குழுவினர் கேட்ட துணிப்பையை தாய் கலாமேரி தானே தைத்துக் கொடுத்தார். இது தொடர்பான போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது. தாய் கலாமேரியின் பாசப்போராட்டத்தை பார்த்து பலரும் கண்கலங்கினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM