"மோகன்லால் - கவுதமி நடிக்கும் “ நமது

Published By: Robert

24 May, 2016 | 01:39 PM
image

மோகன்லால் – கவுதமி ஜோடி சேர்ந்து நடிக்க மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழில் ஒரு படம் தயாராகிறது. தெலுங்கில் அந்தப் படத்திற்கு “மனமன்தா“ என்றும் தமிழில் “நமது“ என்றும் பெயர் சூட்டி உள்ளார்கள்.

சாய் ஷிவானி வழங்க, வாராஹி சலனசித்திரம் மற்றும் சாய் கோரப்பட்டி புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது.

மலையாளத்தில் அமோக வெற்றி பெற்ற ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா படத்தில் ஜோடி சேர்ந்த மோகன்லால் – கவுதமி ராசியான ஜோடி என்று கேரளாவில் போற்றப் படுவதுண்டு.

மேலும், விஸ்வநாத் - ஹனிஷா ஆம்ரோஷ் இன்னொரு ஜோடியாக நடிக்கிறார்கள். நாசர், ஊர்வசி, சந்திரமோகன், கொல்லப்புடிமாருதிராவ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

வசனம் மற்றும் பாடல்களை மதன்கார்க்கி எழுதுகிறார்.   

ஒளிப்பதிவு - ராகுல் ஸ்ரீவத்சவ்

இசை - மகேஷ் சங்கர்

தயாரிப்பு - ரஜினி கோரப்பட்டி

எழுதி இயக்குபவர் சந்திரசேகர் ஏலட்டி. இவர் தெலுங்கில் கோபிசந்த் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை இயக்கி இருப்பவர்.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right