நடிகர் சந்தானம் =இயக்குநர் ராஜேஷ் கூட்டணி மீண்டும் பெயரிடப்படாத புதிய படம் ஒன்றில் இணைந்திருக்கிறார்கள்.

இயக்குநர் ராஜேஷும், நகைச்சுவை நடிகர் சந்தானமும் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியவர்கள்.இவர்களின் கூட்டணிக்கு ரசிகர்களிடத்தில் எப்போதும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். 

இந்நிலையில் நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம், கதையின் நாயகனாக மாறி தில்லுக்கு துட்டு, தில்லுக்குத் துட்டு=2, ஏ1 என தொடர்ச்சியாக வெற்றிப்படங்களில் நடித்து கொமர்ஷல் ஹீரோவாகவும் வலம் வருகிறார். அத்துடன் சந்தானம் தற்பொழுது டகால்டி, டிக்கிலோனா ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இப்படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ராஜேஷ் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் கதையின் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இயக்குனர் ராஜேஷ் இதற்கு முன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மிஸ்டர் லோக்கல்’ என்ற படத்தை இயக்கினார் என்பதும், இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் தயாரான பெரும்பாலான படங்களில் சந்தானம் இடம் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.