ஆணிப் பலகையில் படுத்து இளைஞர்கள் சாதனை..!

Published By: Daya

26 Oct, 2019 | 09:35 AM
image

சூரத்தைச் சேர்ந்த தற்காப்பு கலை வல்லுநர்கள் 9 பேர், ஆணிப் பலகையில் ஒருவர் மீது ஒருவர் படுத்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த தற்காப்பு கலை வல்லுனர்கள் 9 பேர் இணைந்து கின்னஸ் உலக சாதனை புரியும் நிகழ்ச்சி மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்காக, 4 முதல் 6 அங்குலம் நீளம் கொண்ட ஆணிகளைக் கொண்ட பலகை தயார் செய்யப்பட்டிருந்தது.

அதில், ஒருவர் மீது ஒருவர் படுத்த பிறகு, மேலே இருப்பவர் மீது ஒரு கல் வைக்கப்படுகிறது. அதை ஒருவர் சுத்தியலால் ஓங்கி அடித்து உடைக்கிறார். பார்ப்பவர்களை பிரமிப்பில் ஆழ்த்திய இந்த நிகழ்வு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. 

இந்த குழுவினர் அவ்வப்போது பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். இதற்கு முன்னர், இதே குழுவைச் சேர்ந்த 8 பேர் ஆணிப்பலகையில் ஒருவர் மீது ஒருவர் படுத்து நிகழ்த்திய சாதனையே பெரிதாக இருந்தது. தற்போது, அவர்களே தங்கள் முந்தைய சாதனையை முறியடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right