முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபயகுணவர்தனவுக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

ஒரு இலட்சம் ரொக்கப் பிணையிலும் 100 இலட்ச நான்கு சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முறைக்கேடான முறையில் சொத்து திரட்டியுள்ளார் என்ற குற்றஞ்சாட்டில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால், அவருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.