இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன், இலங்கையின் முதலாவது மற்றும் PCI-DSS சான்றளிக்கப்பட்ட மொபைல் கட்டண பயன்பாடான Genie, ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி நடைபெற்ற LankaPay தொழில்நுட்ப விருதுகள் 2019 இல் மிகவும் பிரபலமான மின்னணு கட்டண தயாரிப்பு (Fintech) மற்றும்  சில்லறை விற்பனையாளர்களுக்கான மொபைல் விண்ணப்பம் ஆகியவற்றுக்கு இரண்டு தங்க விருதுகளை வென்றுள்ளது.

LankaPay தேசிய கட்டண வலையமைப்பின் செயற்பாட்டாளரான LankaClear லிமிட்டட் நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து இந்த விருதுகள் நாட்டின் மின்னணு கொடுப்பனவுகளை ஊக்குவிக்கும் நோக்கில் உறுதியுடன் இருக்கும் கட்டண தொழில்நுட்ப கண்டுபிடிப்பு துறையின்  முன்னோடிகளை அங்கீகரிப்பதை நோக்கமாக கொண்டுள்ள அதே நேரத்தில் வாடிக்கையாளர் சௌகரியத்தினையும் மேம்படுத்துகின்றன. 

Genie, வழமையான பணப்பையினை உண்மையான டிஜிட்டல் பணப்பையாக மாற்றுகின்றது. இது கிரடிட் மற்றும் டெபிட் அட்டைகள், நடைமுறை கணக்கு மற்றும் சேமிப்பு கணக்குகள் (CASA) மற்றும் eZ Cash கணக்குகளை மொபைல் தொலைபேசிகளில் பாதுகாப்பாக வைத்திருக்கின்றது. மேலும் பயன்பாட்டிற்கான தடையற்ற கட்டண அனுபவத்தை செயல்படுத்துகின்றது. கொடுப்பனவு நிலையங்களின்  ஊடாகவும் (OTC QR குறியீட்டின் ஊடாக) இணையத்தளத்தின் ஊடாகவும் மற்றும் 12000 க்கும் அதிகளவான விற்பனை நிலையங்களின் ஊடாகவும் கொடுப்பனவுகளை மேற்கொள்ள அனுமதிக்கின்றது. உலகளாவிய ரீதியில் PCI தரவு பாதுகாப்பு தர நிர்ணய அமைப்பால் முழுமையாக சான்றளிக்கப்பட்ட Genie,   இலங்கையின் டிஜிட்டல் கட்டண  நிலப்பரப்பை இயக்க பாதுகாப்பான மற்றும் வசதியான பரிவர்த்தனை தளத்தை கொண்டு வருகின்றது. அதிநவீன ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு மற்றும் வணிக இடைமுகத்தை பயன்படுத்த எளிதானதாகவும் காணப்படுகின்றது. விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை தொழில்நுட்பத்தில் மிகச் சமீபத்தியதும் மற்றும் மொபைல் தொலைபேசியில் இருந்து நேரடியாக பணம் செலுத்தும் பரிவர்த்தனைக்கும் உகந்ததாகவும் காணப்படுகின்றது.

இந்த நிகழ்வின் போது டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தி தலைமை டிஜிட்டல் சேவைகளின் அதிகாரி கலாநிதி நுஷாட் பெரேரா கருத்து தெரிவிக்கையில், மொபைல் பணம் மற்றும் கொடுப்பனவுகளை நோக்கிய மாற்றத்தை உலகம் முழுவதும் காணும் நிலையில், இலங்கையில் இது முன்னணியில் இருப்பதில் பெருமிதம் கொள்கின்றோம். மேலும் மிகவும் பிரபலமான மின்னணு கட்டண தயாரிப்பு (Fintech) மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கான மொபைல் விண்ணப்பம் அகியவற்றுக்கு விருதுகளை கிடைத்துள்ளமையினையிட்டு பெருமிதம் கொள்கின்றோம். இலங்கை மத்திய வங்கியின் புதுமையான கொள்கை சூழலுக்காகவும், முழுமையான டயலொக் குழுவினருடன் இந்த வெற்றியை பகிர்ந்துக்கொள்கின்றேன். அதிநவீன தொழில்நுட்பத்தை தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்காக இலங்கையின் வாழ்வையும் நிறுவனங்களையும் மேம்படுத்துவதற்கும் வளப்படுத்தவதற்கும் எங்கள் பார்வையை முன்னெடுத்துச் செல்கின்றோம் என தெரிவித்தார்.

Genie  இனை Google Play Store, Apple App Store மற்றும் www.genie.lk ஊடாக டவுன்லோட் செய்துக்கொள்ள முடியும்.

(இடமிருந்து வலம்) டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் மொபைல் பணம் மற்றும் கொடுப்பனவு, வியாபார அபிவிருத்தி தயாரிப்பு மேலாளர் ஷப்ராஸ் ரசிக்,  LankaClear பிரைவட் லிமிட்டட் நிறுவனத்தின் தலைவர் திரு. அனில் அமரசூரிய, டயலொக்  ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் தலைமை டிஜிட்டல் சேவைகள் அதிகாரி கலாநிதி நுஷாட் பெரேரா, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசாமி, நீதிபதிகள் குழுவின் தலைவர் திரு. வசந்த தேசபிரிய, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் டிஜிட்டல் சேவைகள் பிரிவின் சிரேஷ்ட பொது முகாமையாளர் ஜனக ஜெயலத், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி Fintech சிரேஷ்ட முகாமையாளர் கிமாலி சொய்சா மற்றும் LankaClear பிரைவட் லிமிட்டட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் / தலைமை நிர்வாக அதிகாரி சன்ன டீ சில்வா.