சீனாவின் ஹூனான் மாகாணம் ஜிங்ஜாங் நகரில் உள்ள ஒரு குதிரை இணையத்தை கலக்கி வருகிறது. 

 குறித்த குதிரை மீது சவாரி செய்ய யாரேனும் ஏறினால் மயக்கம் வருவதுபோல் நடித்து தரையில் விழுந்து விடுகிறது இந்த சுட்டி குதிரை. உயிர்போனால் எப்படி தரையில் கிடக்குமோ, அப்படி கால்களை மேலே தூக்கி, நாக்கை வெளியே தள்ளி அட்டகாசமாக நடிக்கிறது அந்த குதிரை.

பின்னர் சவாரி செய்ய வந்தவர் திரும்பி சென்றதும் துள்ளி குதித்து எழுந்து விடுகிறது. ஊரின் பெயரையே அந்த குதிரைக்கு வைத்து அதை ‘ஜிங்ஜாங்’ என்று அழைக்கின்றனர். ஒவ்வொரு முறையும் அதன் மீது ஏற வரும்போது மயங்கி விழுந்து விடுகிறது ‘ஜிங்ஜாங்’. சில சமயம் தொட்டாலே மயக்கம்போட்டு விழுகிறது.

‘ஜிங்ஜாங்’ சுட்டித்தனம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மிகக்குறைவான நேரத்தில் 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளை அந்த வீடியோ பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.