வெசாக் போயா தினத்தன்று 'கசிப்பு தன்சல்' வழங்குவதற்காக காத்திருந்த நபர் ஒருவர் 1728 கசிப்பு போத்தல்களுடன்  கைது செய்யப்பட்ட சம்பவம் மொரவக்க பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பாணந்துறை, வலன பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலும் சில நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.