அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக அதனை அண்மித்த பகுதியிலுள்ள மக்களை குடியிருப்புகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஒயின் நகரம் என அழைக்கப்படும் சோனாமா கவுண்டியிலுள்ள இப்பகுதியானது காட்டுத் தீ காரணமாக கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது.

இதுவரை சுமார் 10 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி முற்றிலும் எரிந்து சேதமாகியுள்ளது. ஏராளமான மரங்கள் கருகியுள்ளன.

தீயணைப்பு படையினர் தொடர்ந்து தீயை அணைக்க முயற்சித்தும் காற்று வேகமாக வீசுவதால், பல்வேறு பகுதிகளுக்கும் தீ பரவி வருகிறது.

இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக குறித்த பகுதியிலுள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை குடியிருப்புகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.