புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறையினூடாக திருகோணமலை வரையிலும் மட்டகளப்பிலிருந்து பொத்துவிலூடாக அம்பாந்தோட்டை வரையுள்ள கடல்களில் இன்று காற்று மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை வீசக்கூடுமென வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சேது சமுத்திர பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோமீற்றர் வரை இருக்கக்கூடுமெனவும் இன்று நாட்டில் பல பகுதிகளில் 75 தொடக்கம் 100 மில்லி மீற்றர் வரை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.