மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் பார்­வைக்கு தேர்தல் களை­கட்­ட­வில்லை, சூடு­பி­டிக்­க­வில்லை என்­பது போல தென்­பட்­டாலும் கூட, மக்­க­ளு­டைய உள்­ளங்­க­ளிலே அன்னச் சின்­னத்­திற்கு வாக்­க­ளிக்க வேண்டும், சஜித் பிரே­ம­தா­சவை ஜனா­தி­ப­தி­யாக்க வேண்டும் என்று இந்த மாவட்­டத்தில் இருக்­கின்ற அனைத்து சமூ­கங்­களும் உறு­தி­யாக இருக்­கின்­றன என்று கிரா­மிய பொரு­ளா­தார அபி­வி­ருத்தி, விவ­சாய நீர்ப்­பா­சன இரா­ஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரி­வித்தார்.

மட்டு.  கோண­மலை வீதியில், புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் மட்டு மாவட்ட தேர்தல் அலு­வ­லகம் நேற்­று­முன்­தினம் திறந்து வைக்­கப்­பட்­டது. அதன்­போதே அவர்  மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

முன்னாள் பிரதி அமைச்­சரும் ஐக்­கிய தேசி­யக்­ கட்சி பட்­டி­ருப்பு தொகுதி பிர­தம அமைப்­பா­ளரும் மற்றும் தேசிய காகித ஆலை தலை­வ­ரு­மான சோ.கணே­ச­மூர்த்தி தலை­மையில் இடம்­பெற்ற இந்­நி­கழ்வில் அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

இந்த நாட்டு மக்கள் அச்­ச­மில்­லாது நட­மா­டக்­கூ­டிய ஜன­நா­யகம் மிக்க சிறந்த தலை­மைத்­து­வத்தை தமிழ், முஸ்லிம் கிறிஸ்­தவ சமூகம்  மற்றும் மங்­க­ள­க­மவில் இருக்­கின்ற சிங்­கள சமூகம் என, மட்டு மாவட்­டத்­திலே இருக்­கின்ற அனைத்து சமூ­கங்­களும் எதிர்­பார்க்­கின்­றார்கள்.

கடந்த 2005 ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­த­லில் நாங்கள், 02 இலட்­சத்து 14,000 க்கு மேற்­பட்ட வாக்­கு­களைப் பெற்றோம். இலங்­கை­யில் ஆகக் கூடு­த­லாக 81.4 வீதம் வாக்­க­ளிக்­கப்­பட்ட மாவட்டம் மட்டு மாவட்­ட­மாகும்.

இலங்­கை­யில் ஆகக் கூடு­த­லான விகி­தா­சா­ரத்­தில் 2015 ஆம் ஆண்டு வேட்­பா­ள­ரா­க­வி­ருந்த ஜனா­தி­ப­திக்கு ஆத­ரவு வழங்­கி­யது மட்டு மாவட்­டத்தில் இருக்­கிற அனைத்து மக்­களும் என்­பதை, இந்த தேசத்­துக்கு சொல்ல கட­மைப்­பட்­ட­வ­னாக இருக்­கின்றேன். அந்த வகை­யிலே இம்­முறை நடை­பெறவுள்ள தேர்­தலில்  சஜித் பிர­மே­தா­ச­வுக்கு அன்னச் சின்­னத்­திலே இரண்­டரை இலட்­சத்துக்கு மேற்­பட்ட வாக்­கு­களை வாரி வழங்­கு­வ­தற்கு  மக்கள் தயா­ராக இருந்­து­ கொண்­டி­ருக்­கின்­றார்கள். எனவே இதில் மாற்­றுக்­ க­ருத்து எதுவும் கிடை­யாது.

இந்த மாவட்­டத்தில் இனங்­க­ளுக்­கி­டை­யே­யான முரண்­பா­டுகள், கட்சி ரீதி­யான பிரச்­சி­னைகள் என்று யாரும் பேசு­வ­தற்கு கிடை­யாது. ஆனால் இங்கே ஒரு சில அர­சி­யல்­வா­திகள் அவ­சர அவ­ச­ர­மாக அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொள்ள விரும்­பு­கின்­ற­வர்­களோ இன­வா­தத்தை தூண்டி ஆட்­சியைப் பெற்­றுக்­கொள்ள விரும்­பு­ப­வர்­களோ அல்­லது தமிழ்த்­ தே­சியக் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து அக்­கட்­சிக்கு துரோகம், அநி­யாயம் இழைத்­து­விட்டு வந்த ஒரு சிலர் ஆட்­சி­மாற்­றத்­தில் கோத்­த­பாய ராஜ­பக்‌­ஷ­வுக்குப் பின்னால் வால்­பி­டித்து அலை­வ­தென்­பது சிறு­பான்மை சமூ­கத்துக்கு செய்­கின்ற மாபெரும் துரோ­க­மாக நாங்கள் பார்க்­கின்றோம்.

மட்டு மாவட்­டத்தை பொறுத்­த­வ­ரையில் பிரச்­சி­னைகள் வந்­த­பொ­ழு­திலும், இனங்­க­ளுக்­கி­டை­யி­லான ஒரு­மைப்­பாடு ஓரிரு நாட்­க­ளுக்குள் தீர்ந்து போகின்ற மாவட்டம் என்­ப­திலே எங்கள் எல்­லோ­ருக்கும் பெருமை இருக்­கி­றது.

அந்த வகை­யில் இனத்­து­வே­சத்தை மாத்­திரம் கொண்­டி­ருக்கும் கோத்­த­பா­ய­வினை ஆத­ரிக்­கின்ற ஒரு சில­ரு­டைய செயற்­பா­டு­களை மாவட்­டத்தில் இருக்­கின்ற ஒட்டு­மொத்த சமூ­கமும் நிரா­க­ரிக்க வேண்­டு­மென்று கெள­ர­வ­மாக வேண்­டுகோள் விடுக்­கின்றேன். ஏனென்றால் மட்டு மாவட்­டத்தில் இருக்­கின்ற சிறு­பான்மை சமூகம் என்ற அடிப்­ப­டை­யில் எங்­க­ளுக்குள் ஒரு ஒற்­று­மை­பட்ட நோக்­கோடு பய­ணிக்க வேண்­டிய தேவைப்­பாடு இருக்­கின்­றது.

ஒரு சிலர் கூலிக்­காக மார­டிக்­கின்ற வேலைத்­திட்­டத்தை எதிர்­கா­லத்தில் நிறுத்­திக்­கொள்ள வேண்டும் என்று வின­ய­மாக வேண்­டுகோள் விடுக்­கின்றேன். இந்த வேண்­டு­கோ­ளினை விசே­ட­மாக  வியா­ழேந்­தி­ர­னுக்கு ஏத்தி வைக்க விழை­கின்றேன்.

கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் காணாமல் போன­வர்கள் தொடர்­பா­கவும் தமிழ் மக்­க­ளுக்கு நடக்­கிற துன்ப துயர அநி­யா­யங்கள் பற்­றியும், வியா­ழேந்­திரன் வாய் கிழிய பாரா­ளு­மன்றில் கதைத்­ததை இவ்­வி­டத்தில் சுட்­டிக்­காட்ட வேண்­டிய தேவைப்­பாடும் இருக்­கின்­றது. இப்­படி மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சிக்­கா­லத்­தில் கொத்துக் கொத்­தாக குண்­டு­களைப் போட்டு தமிழ் ­மக்­களை அழித்­தார்கள் என்று சொன்­னார்கள்.

எங்­க­ளு­டைய இளை­ஞர்­களை கால் இன்றி வலு­வி­ழக்­கச்­செய்து, குரு­டாக்கி, தமிழ் மக்­க­ளு­டைய வாழ்­வா­தா­ரத்தை கூண்­டோடு அழித்­த­வர்கள் மற்றும் தமிழ்­மக்­களை இல்­லாமல் ஒழிக்க வேண்­டு­மென ராஜ­பக்‌ஷ சமூகம் அவ­ரது குடும்பம் அடித்­துக்­கொண்டு திரி­கின்­றது என்று சொன்ன வியா­ழேந்­திரன், இன்று அதே ராஜ­பக்‌ஷ குடும்­பத்­திற்­காக வாக்குக் கேட்ப­தென்­பது தமிழ் மக்­க­ளுக்கு செய்கின்ற துரோகமும் வேடிக்கையான விடயமுமாக பார்க்கிறேன். அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற தமிழ் முஸ்லிம் மக்கள் கோத்தபாயவை அங்கீகரிக்கமாட்டார்கள் என்பதை திடமாக சொல்ல முடியும் என்றார்.

இம்முறை நடைபெறவிருக்கின்ற தேர்தலில் இலங்கையில் மீண்டும் ஒரு முறை சாதனை படைக்கின்ற அதிகப்படியான ஒரு விகிதாசாரத்தை மட்டு மாவட்டம் பெற்றுக்கொடுக்கும் என்று தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் சார்பாக நம்பிக்கையுடனும் திடமாகவும்  சொல்கிறேன்.