விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த டிரெக்டர் வண்டியானது அதன் சாரதியுடன் 35 அடி ஆழமான கிணற்றில் விழுந்த சம்பவமொன்று கிளிநொச்சி  மலையாளபுறம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

டிரெக்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாரினாலேயே வண்டியானது சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து கிணற்றில் விழுந்துள்ளது.

அத்துடன் குறித்த வண்டியின் சாரதி காப்பாற்றப்பட்ட போதிலும்  டிரெக்டர் வண்டியானது கிணற்றினுள் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.