நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக சேதமடைந்துள்ள சொத்துகளை மீள்கட்டமைப்பு செய்வதற்காக ரூபாய் 15 ஆயிரம் கோடி முதல் 25 ஆயிரம் கோடி வரை நிதி தேவைப்படுவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று நிதி அமைச்சில் இடம்பெற்ற கொழும்பு மாவட்ட குழு கூட்டத்தின்போதே நிதி அமைச்சர் இதனை தெரிவித்தார்.