(இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல் 21 தின குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டிய அரசாங்கம் இன்று தப்பித்து கொள்வதற்காக குற்றச்சாட்டுக்களை அரச அதிகாரிகள், புலனாய்வு பிரிவினர் மீதும் சுமத்தியுள்ளதாக  பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மஹியங்கனை நகரில் இன்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எமது ஆட்சியில் தேசிய பாதுகாப்பிற்கே எந்நிலையயிலும் முக்கியத்துவம் வழங்கப்படும். பொருளாதாரம் தொடர்பில் எவ்வித    தூரநோக்கு கொள்கைகளும் இல்லாத நிலையில் பொருளாதாரம் முகாமைத்துவம் செய்யப்பட்டமையினால் தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. 

தேசிய உற்பத்திகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கவில்லை.  மிளகு தேயிலை  உள்ளிட்ட எமது நாட்டுக்குகே உரித்தான உற்பத்திகள்  அனைத்தும் இரண்டாம் நிலையாக்கப்பட்டமையினால்  இந்த உற்பத்திகள் அனைத்தும் இறக்குமதி   செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.  

எமது ஆட்சியில்  இறக்குமதி செய்யப்படும் எமது நாட்டு தேசிய உற்பத்திகள் அனைத்தும் தடை செய்யப்படும்.  விவசாயத்தை மேம்படுத்துவதற்கு உரமானிங்களும், காப்புறுதி திட்டங்களும் வழங்கப்படும். அத்துடன்  சர்வதேச  நாடுகளில்   விவசாயத்துறையில் பின்பற்றப்படும் தொழினுட்ப முறைகளையும்  எமது தேசிய உற்பத்திகளில்  அறிமுகப்படுத்துவேன் என்றார்.