(இரா. செல்வராஜ்)

தோட்டத்தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையின் மேலதிக  முற்பணமாக  5 ஆயிரம் வழங்குவதற்கு  எடுக்கப்பட்டுள்ள  முடிவுக்கு எதிராக  தேர்தல் சட்டவிதிகளின் கீழ் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளப்போவதில்லை எனசுயாதீன  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய  தெரிவித்தார். 

தோட்டத்தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ருபாவிற்கு  மேலதிகமாக 5  ஆயிரம்  ரூபாவை    வழங்க    தேயிலை  சபையினுடாக  நடவடிக்கை  எடுக்கப்பட்டிருந்தது.  இதற்கான  அங்கீகாரத்தை அமைச்சரவை  வழங்கியிருந்தது.  

இவ்விவகாரம்  தொடர்பாக  பல  தரப்பிலும் தேர்தல் காலத்தில்  மேலதிகமாக  5 ஆயிரம் ரூபாய்  வழங்க  முடியுமா  என்ற    வாத  விவாதங்கள்   நடைபெற்று வரும் நிலையில்  இது  குறித்து  சுயாதீன  தேர்தல்கள்  ஆணையாளர் மஹிந்த  தேசப்பிரியவை  சந்தித்து  கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.