பாரி­ச­வாத பாதிப்­பு : காந்த மணி­களை குருதிச் சுற்­றோட்­டத்தில் உட்­செ­லுத்தி புரட்­சி­கர சிகிச்சை

Published By: Robert

24 May, 2016 | 10:36 AM
image

பாரி­ச­வாத பாதிப்­புக்­குள்­ளா­ன­வர்­களின் குரு­தியில் நுண்­ணிய காந்த மணி­களை உட்­செ­லுத்தி விரை­வாக குண­ம­டையச் செய்யும் புதிய புரட்­சி­கர சிகிச்சை முறை­மை­யொன்றை சர்­வ­தேச மருத்­துவ ஆய்­வா­ளர்கள் குழு­வொன்று கண்­டு­பி­டித்­துள்­ளது.

மேற்­படி ஆய்­வா­னது பிரித்­தா­னிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னையைச் சேர்ந்த மருத்­துவ நிபு­ணர்கள் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இந்த ஆய்வின் முடி­வுகள் அமெ­ரிக்க பாரி­ச­வாத சங்க மாநாட்டில் சமர்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

உல­க­மெங்கும் பாரி­ச­வா­தத்தால் பெரு­ம­ள­வானோர் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். பிரித்­தா­னி­யாவில் மட்டும் ஒவ்­வொரு வரு­டமும் 152,000 பேர் பாரி­ச­வா­தத்தால் பாதிக்­கப்­பட்டு வரு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.

பாரி­ச­வாத பாதிப்­புக்­குள்­ளா­னவர்­களில் ஐந்தில் ஒரு­வ­ருக்கு மூளைக்­கான குருதிச் சுற்­றோட்­டத்தில் குருதி உறைந்து கட்­டி­ப­டு­வ­தா­லேயே அந்தப் பாதிப்பு ஏற்­ப­டு­கி­றது.

அந்த மோச­மான நிலை­மையால் பாதிக்­கப்­பட்டு உயிர் தப்­பு­ப­வர்­களில் அரைப் பங்­கினர் உடல் செய­லி­ழப்­புக்­குள்­ளா­கின்­றனர்.

குருதிச் சுற்­றோட்­டத்தில் ஏற்­படும் குருதிக் கட்­டி­களை உடைக்க எவ்­வ­ளவு நேரம் செல்­கி­றது என்­பதில் அதனால் ஏற்­படும் பாதிப்பு தங்­கி­யுள்­ளது. குருதிக் கட்­டி­களை உடைக்க அதிக நேரம் செல்லும் போது அதனால் ஏற்­படும் பாதிப்பும் பார­தூ­ர­மாக அமையும்.

இந்­நி­லையில் குருதிக் குழாய்க்குள் உட்­செ­லுத்­தப்­படும் மேற்­படி காந்த மணிகள், குருதிக் கட்­டி­களை உடைப்­ப­தற்கு பிர­யோ­கிக்­கப்­படும் மருந்து உடல் முழு­வதும் விரை­வாக கடத்­தப்­பட்டு குருதிக் கட்­டி­களை துரி­த­மாக சென்றடைய வழி­வகை செய்­வ­தாக பிரித்­தா­னிய பல்­கலைக்­க­ழக மருத்­து­வ­ம­னையின் நரம்­பியல் நிபு­ணரும் பாரி­ச­வாத சிகிச்சை நிபு­ண­ரு­மான மருத்­துவ கலா­நிதி றிச்சர்ட் பெரி தெரிவித்தார்.

பாரி­ச­வாத பாதிப்பு ஏற்­பட்டு 3 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் சிகிச்சை அளிக்­கப்­படும் நோயா­ளி­களில் 33 சத­வீ­த­மா­னோ­ருக்கு அந்தப் பாதிப்பால் குறிப்­பி­டத்­தக்க உடல் செய­லி­ழப்பு எதுவும் ஏற்­ப­டு­வ­தில்லை என மருத்­துவ ஆய்­வுகள் கூறு­கின்­றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18
news-image

கண் புரை சத்திர சிகிச்சைக்கு பின்னரான...

2025-03-10 16:47:15
news-image

ஒலிகோஹைட்ராம்னியோஸ் எனும் பனிக்குட நீர் குறைப்பாடு...

2025-03-06 15:49:10
news-image

குளுக்கோமா நோய் : 2020 ஆம்...

2025-03-06 04:09:10
news-image

சமச்சீரற்ற இதய துடிப்பு பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும்...

2025-03-03 14:44:16
news-image

இதய பாதிப்பினை கண்டறிவதற்காக சி டி...

2025-03-01 16:56:34