அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலியாவின் பிரதமர் அணிக்கும் இடையில் கான்பெராவில் இடம்பெற்றுவரும் ரி20 போட்டியின் போது அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட்மொறிசன் தேநீர் இடைவேளையின் போது மைதானத்திற்குள் சென்று குளிர்பானங்களை வழங்கியுள்ளார்.

இன்றைய போட்டியில் இலங்கை அணி முதலில் தடுப்பெடுத்தாடிய வேளை 16 ஓவரின் முடிவில் பிரதமர் ஸ்கொட் மொறிசன் மைதானத்திற்குள் குளிர்பானங்களுடன் இறங்கி வீரர்களிற்கு அவற்றை வழங்கியுள்ளார்.

இந்த படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி  20 ஓவர்களில் 138 ஓட்டங்களை பெற்றுள்ளது.