2016 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாத காலப்­ப­கு­தியில் நாட்டின் வர்த்­தக கணக்கு நிலு­வை­யா­னது 2.2% ஆல் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­­தாக இலங்கை மத்­திய வங்கி அறி­வித்­துள்­ளது.

இதே வேளை இவ்­வாண்டின் முதல் நான்கு மாதக்­கா­லப்­ப­கு­தியில் சுற்­று­லாத்­து­றை­யி­லி­ருந்­தான வரு­மானம் 20% அதி­க­ரித்­துள்­ள­துடன் வெளிநா­டு­களில் தொழில் புரி­ப­வர்­க­ளினால் அனுப்­பப்­படும் பணத்­தி­லான அந்­நி­ய செலா­வணி உட்­பாய்ச்சல் 8.1% ஆல் அதி­க­ரித்­துள்­ளது.

அத்­துடன் கடந்த மார்ச் மாத இறு­தியில் 6.2 பில்­லியன் டொல­ராக பதிவு செய்­யப்­பட்ட அந்­நிய செலா­வணி கையி­ருப்­பா­னது ஏப்ரல் மாத்தில் 6.1 பில்­லியன் டொல­ராக பதி­வு­செய்­யப்­பட்டு சிறிய வீழ்ச்­சியை பதிவு செய்­துள்­ளது.இந்­நி­லையில் 2016ஆம் ஆண்டின் இது வரை­யான காலப்­ப­கு­தியில் ஐக்­கிய அமெ­ரிக்க டொல­ருக்கு நிக­ராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறிய வீழ்ச்சியினையும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.