பதுளை எல்ல பல்லேகட்டுவ பகுதியில் பிரதி அதிபர் ஒருவர் 14 வயது சிறுவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேகநபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாகவும் அவரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸர் தெரிவித்தார்.

47 வயதான பிரதி அதிபரால் துஸ்பிரயோகத்துக்கு  உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் 14 வயதான சிறுவன் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் துஸ்பிரயோகத்துக்கு  உட்படுத்தப்பட்டுள்ளதாக சிறுவனின் தாயினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்தே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.