சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்த இரண்டு பெண்கள் உட்பட 13 பேர் சிலாபம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய சிலாபம், சுதுவெல்ல பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து இவர்கள் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், பலாலி, மாங்குளம் மற்றும் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 21 வயது தொடக்கம் 44 வயதுடையவர்கள் ஆவர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.