தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டது தொடர்பாக தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில் மீண்டும் ஒருமுறை ஜெயலலிதாவை வாழ்த்துவதாக அவர் கூறியுள்ளார். 


முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் தனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் கலந்து கொண்டுள்ளதை குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள பேஸ்புக் அறிக்கையில், கூட்டத்தோடு கூட்டமாக ஸ்டாலினை உட்கார வைத்து விட்டதாகவும் இன்னும் ஜெயலலிதா திருந்தவில்லை என்றும் சாடியுள்ளார்.இந்த நிலையில் ஸ்டாலினும் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவைப் போட்டுள்ளார். அதில், இன்று தமிழக முதல்வரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றேன்.

அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை என் வாழ்த்துக்கள். 
மேலும் அவர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்றும் தமிழக மக்களுக்காக கடினமாக உழைப்பார் என்றும் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.