(பதுளையிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)

45ஆவது தேசிய விளை­யாட்டு விழா இன்று பதுளை வின்ஸ்டன்ட் டயஸ் விளை­யாட்­ட­ரங்கில் கோலா­க­ல­மாக ஆரம்­ப­மா­க­வுள்­ளது. தொடரின் ஆரம்ப நிகழ்­வு­களில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கலந்­து­கொண்டு போட்­டி­களை ஆரம்­பித்­து­ வைக்­க­வுள்­ள­தாக ஏற்­பாட்­டுக் ­குழு அறி­வித்­துள்­ளது.

அதேபோல் தொடரின் இறு­தி­நாளில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கலந்­து­கொண்டு வெற்­றி­ பெற்ற வீரர்­க­ளுக்­கான பரி­சில்­களை வழங்­கி­ வைக்­க­வுள்ளார்.

இன்று ஆரம்­ப­மாகும் 45ஆவது தேசிய விளை­யாட்டு விழா­வா­னது தொடர்ச்­சி­யாக நான்கு நாட்கள் நடை­பெற்று எதிர்­வரும் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யுடன் நிறை­வ­டை­ய­வுள்­ளது.

45ஆவது தேசிய விளை­யாட்டு விழாவில் வெற்றி பெறும் வீர வீராங்­க­னை­க­ளுக்கு இம்­முறை அதி­க­ள­வான வெகு­ம­தி­களை வழங்க விளை­யாட்­டுத் ­துறை அமைச்சு நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளது.

அதன்­படி தேசிய சாதனை நிலை­நாட்டும் வீர­ருக்கு ரூபா ஒரு இலட்சம் பணப்­ப­ரிசு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. அத்­தோடு ஒவ்­வொரு போட்டிச் சாத­னைக்கும் 50 ஆயிரம் ரூபா வீதம் பணப்­ப­ரிசு வழங்­கவும் திட்டம் இருப்­ப­தாக விளை­யாட்­டுத்­ துறை அமைச்சு அறி­வித்­துள்­ளது.

இந்த விளை­யாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கலந்­து­கொண்டு ஆரம்­பித்து வைக்­க­வுள்ளார். அத்­தோடு போட்டித் தொடரின் இறுதி நாளான 27ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கலந்து கொள்­ள­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

45ஆவது தேசிய விளை­யாட்டு விழா ஏற்­பா­டுகள் குறித்து கருத்துத் தெரி­வித்த விளை­யாட்டு அபி­வி­ருத்தித் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் முது­கல, இம்­முறை நடை­பெறவுள்ள 45ஆவது தேசிய விளை­யாட்டு விழாவில் வெற்றி பெறும் வீரர்­க­ளுக்கு பெறு­ம­தி­ மிக்க வெகு­ம­தி­களை வழங்க நாம் நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்ளோம். அதன்­படி ஒரு போட்­டியில் தங்­கப்­ப­தக்கம் பெறும் வீர­ருக்கு 15ஆயிரம் ரூபாவும், வெள்ளிப் பதக்­கத்­துக்கு 10 ஆயிரம் ரூபாவும், வெண்­கலப் பதக்­கத்­துக்கு 6 ஆயிரம் ரூபாவும் பணப் பரிசு வழங்­கப்­ப­ட­வுள்­ளது என்றார்.

இம்­முறை நடை­பெ­ற­வுள்ள தேசிய விளை­யாட்டுப் பெரு விழாவில் வரு­டத்தின் அதி­சி­றந்த வீரர் மற்றும் அதி­சி­றந்த வீராங்­க­னை­யாக தெரி­வா­கின்ற வீரர்­க­ளுக்கு இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்தின் உத­வி­யால் அதி­சொ­குசு கார்கள் இரண்டு பரி­சாக வழங்­கு­வ­தற்கு விளை­யாட்­டுத்­துறை அமைச்சு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.   

இது­வரை காலமும் தேசிய விளை­யாட்டுப் பெரு­வி­ழாவில் அதி­சி­றந்த வீரர்­க­ளாக தெரிவு செய்­யப்­ப­டு­கின்ற வீரர்­க­ளுக்கு மோட்டார் சைக்­கிள்கள் வழங்­கப்­பட்டு வந்த நிலையில், இம்­ முறை முதல் ­த­ட­வை­யாக கார்­களை பரி­சாக வழங்­க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்தப் போட்டித் தொடரில் அகில இலங்கை ரீதி­யாக 2100 போட்­டி­யா­ளர்கள் கலந்­து­கொள்­ள­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.