(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

தேசி­யப்­பட்­டியல் வழங்­கக்­கூ­டாது என சஹ்ரான் தெரி­வித்த நபரை அமைச்சர் ரவூப் ஹக்கீம் முடி­யு­மானால் வெளிப்­ப­டுத்­த­வேண்டும் என எதிர்க்­கட்சி உறுப்­பினர் நிமல் லான்சா தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை 2020ஆம் ஆண்டு ஜன­வரி முதலாம்  திகதி முதல் நடை­மு­றைக்கு வரும்­வ­கையில் நான்­கு­மாத காலங்­க­ளுக்­கான அர­சாங்க செல­வீ­னங்­க­ளுக்­கான கணக்­க­றிக்கை மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கை யில், ஏப்ரல் தாக்­குதல் தொடர்­பாக ஆராய பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு அமைக்­கப்­பட­ வேண்டும் என்று நானே ஆரம்­பத்தில் தெரி­வித்தேன். என்­றாலும் தெரி­வுக்­குழு உறுப்­பி­னர்கள் தொடர்பில் எமக்கு திருப்தி இல்­லா­த­தனால் அதனை எதிர்த்து­ வந்தோம். தெரி­வுக்­கு­ழுவின் அறிக்கை  நீதி­யாக இருக்­க­மாட்­டாது என தெரி­வித்­தி­ருந்தோம். ஆனால் தற்­போது விசா­ர­ணைக்­கு­ழுவில் இருந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் பயங்­க­ர­வாத தாக்­குதல் தாரி­யான சஹ்­ரா­னுடன் இணைந்து கலந்­து­ரை­யாடும் காட்­சி­களை ஊட­கங்கள் ஊடாக பார்க்­கின்றோம். அவ்­வா­றாயின் தெரி­வுக்­குழு விசா­ரணை நீதி­யாக இடம்­பெற்­றுள்­ள­தாக நம்­ப­மு­டி­யுமா? அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீது எமக்கு நம்­பிக்கை இருக்­கின்­றது.என்­றாலும் ஊட­கங்­களில் வெளிப்­ப­டுத்தி இருக்கும் படங்கள் தொடர்பில் அவர் தெளி­வு­ப­டுத்­த­ வேண்டும். அத்­துடன் சஹ் ­ரா­னு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லின்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு 50 ஆயிரம் வாக்­கு­களை பெற்­றுத்­தந்­தி­ருக்­கின் றோம். அதனால் தேசி­யப்­பட்­டி­யலில் அவ­ருக்கு வழங்­கக்­கூ­டாது என சஹ்ரான் தெரி­விக்­கின்றார். சஹ்ரான் தெரி­விக்கும் அந்த நபர் யார் என்று கேட்­கின்றோம். அமைச்சர் ரவூப் ஹக்கீம் அந்த நபரை முடி­யு­மானால் வெளிப்­ப­டுத்­த­ வேண்டும் என்றார்.

இதன்­போது சபையிலிருந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் எழுந்து தெரி­விக்­கையில், சஹ்­ரா­னுடன் நான் கலந்­து­ரை­யா­டி­யது 2015 இலாகும். அந்தக் காலப்­ப­கு­தியில் சஹ்ரான் பயங்­க­ர­வாதி என யாரும் அறிந்­தி­ருக்­க­வில்லை. அந்தக் காலப்­ப­கு­தியில் அவ­ருடன் இணைந்து செயற்­பட்­ட­வர்­க ளின் படங்கள் என்­னிடம் இருக்­கின்­றன என தெரி­வித்து சில படங்­களை காட்டி, அதில் இருக்கும் ஒருவர் எம்.எஸ்.எம்.ஸியாத். அவர்தான் பொதுஜன பெரமுன மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக இருக்கின்றார். கோத்தபாய ராஜபக்ஷவை மட்டக்களப்புக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வர இருக்கின்றார். அவரை அவர்தான் வர வேற்க இருக்கின்றார் என்றார்.